தமிழகத்தில் 600, சென்னையில் மட்டும் 391: இன்றைய கொரோனா அப்டேட்

வெள்ளி, 8 மே 2020 (18:28 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இன்று தமிழகத்தில் 600 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக தெரிவித்துள்ளார். . இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 6009ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 600 பேர்களில் சென்னையில் மட்டும் 391 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3035 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 13980 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தமிழகத்தில் மொத்தம் 2,16,417 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்