நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் – 26 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!

வியாழன், 21 ஜனவரி 2021 (16:46 IST)
நிவர் புயலால் தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரையைக் கடந்தது. இதற்கு முன்னேற்பாடாக தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களைப் பாதுக்காத்தது. டெல்டா மாவட்டங்களில் தேசிய பேரிடர்மீட்புப் படைவீரர்கள் முகாமிட்டு அபாயமுள்ளா பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். ஆனாலும் விவசாயிகள் இந்த புயலால் பாதிப்புகளை சந்தித்தனர்.

இதையடுத்து இப்போது தமிழக அரசு, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காக 26 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்