உங்களை மாதிரி எடப்பாடி அசிங்கப்பட மாட்டார்! – ஸ்டாலினுக்கு எஸ்.வி.சேகர் பதில்!

வெள்ளி, 3 ஜனவரி 2020 (10:54 IST)
பிரதமருக்காக பொங்கல் தேதியை மாற்றிவிடாதீர்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எஸ்.வி.சேகர்.

தமிழகமெங்கும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதற்கு அடுத்த நாள் பிரதமர் மோடி மாணவர்களுக்காக உரையாடும் நிகழ்ச்சி இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று வெளியான சுற்றறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விடுமுறை நாளில் மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தினால் திமுக போராட்டம் நடத்தும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பேசும் நிகழ்ச்சி பல்வேறு காரணங்களுக்காக ஜனவரி 20ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின் ‘பிரதமருக்காக பொங்கல் தேதியை மாற்றி விடாதீர்கள்” என கிண்டலாக பதிவிட்டார். இதற்கு பதிலடி கொடுக்க எஸ்.வி.சேகர் தனது ட்விட்டரில் ”தமிழ்ப்புத்தாண்டு தேதியை திமுக அரசு மாற்றி அதை யாரும் ஏற்றுக் கொள்ளாமல் அசிங்கப்பட்ட மாதிரி எடப்பாடியின் அதிமுக அரசு அசிங்கப்படாது.” என்று பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்