அல் கொய்தா இயக்கத்துக்கு லஞ்சம் கொடுத்த தொலைத்தொடர்பு நிறுவனம்: என்ன காரணம்?

வியாழன், 2 ஜனவரி 2020 (22:10 IST)
அல் கொய்தாவுக்கு லஞ்சம் கொடுத்த தொலைபேசி நிறுவனம்
 
ஆப்ரிக்காவின் பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான எம்.டி.என் நிறுவனம் தாலிபன் மற்றும் அல் கொய்தாவுக்கு லஞ்சம் கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்த சட்டப்பூர்வமான புகார் அமெரிக்க நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆஃப்கனில் கொல்லப்பட்ட அமெரிக்க குடும்பங்களின் சார்பாக இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்களது செல்போன் டவர்களுக்கான பாதுகாப்பு செலவை குறைப்பதற்காக அந்த நிறுவனம் தாலிபன் மற்றும் அல் கொயத்வாவுக்கு லஞ்சம் வழங்கியதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எம்.டி.என் ஆப்ரிக்காவின் மிகப்பெரிய தொலைபேசி சேவை நிறுவனமாகும். 240 மில்லியன் சந்தாதாரர்களுடன் சர்வதேச அளவில் இந்த நிறுவனம் எட்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது. தங்கள் நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
'எனது போராட்டம் இந்தியாவுக்கு எதிரானதல்ல'
 
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய ஜெர்மன் மாணவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என எழுத்துபூர்வ உத்தரவு தனக்கு அளிக்கப்படவில்லை, மாறாக வாய்மொழி உத்தரவு மட்டுமே அளிக்கப்பட்டது எனக் கூறியுள்ளார்.
 
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவின் கல்வி நிறுவனத்தை தேர்வு செய்து படிக்கும் திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடிக்கு படிக்க வந்த மாணவர், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்துக்கொண்டதற்காக நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது.
 
இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எதிராகப் பேசிய விவகாரம் தொடர்பாக, பெரம்பலூர் அருகே தங்கியிருந்த பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.
 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி நடத்திய போராட்டம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய பேச்சாளரும், எழுத்தாளருமான நெல்லை கண்ணன், அமித் ஷா மற்றும் மோதியை தரக்குறைவாக பேசும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டது.
 
விரிவாகப் படிக்க:மோதி, அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு: நெல்லை கண்ணன் கைது - என்ன நடந்தது?
 
பலாவு நாட்டின் ஒரு பகுதியான ராக் தீவு.
 
பவளப் பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சன் க்ரீம் பயன்பாட்டை தடை செய்யும் உலகின் முதல் நாடாகியுள்ளது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பலாவு.
 
புற ஊதா கதிர்கள், சூரிய வெப்பம் ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து தோலை பாதுகாத்துக்கொள்ள, கடற்கரைகளுக்கு செல்பவர்கள் சன் க்ரீம் பூசிக்கொள்ளும் வழக்கம் பரவலாக உள்ளது.
 
ஆக்சிபென்சீன் (oxybenzone), ஆக்டிநாக்சேட் (octinoxate) உள்ளிட்ட 10 வேதிப்பொருட்களை உள்ளடக்கிய சன் க்ரீம்களை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது புத்தாண்டு தினமான இன்று முதல் இந்தச் சின்னஞ்சிறு தீவு தேசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
 
பர்வீன் காஷ்மீரிலிருந்து திருப்பூர் வந்தது ஏன்?
 
இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பிருந்தாலும் நான் விருப்பப்பட்டுத்தான் தமிழ்நாட்டிற்கு வந்தேன் என்கிறார் காஷ்மீரிலிருந்து வந்து திருப்பூரில் வேலை செய்யும் பர்வீன் பாத்திமா.
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2019ஆம் ஆண்டு உரையாற்றிய கடைசி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் வேலைவாய்ப்புக்காக தமிழகம் வந்துள்ள காஷ்மீர் பெண்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
 
அவர்களில் ஒருவர்தான் பர்வீன் ஃபாத்திமா.
 
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட கார்கில் பகுதியில் இருக்கும் கிராமம் ஒன்றைச் சேர்ந்த பர்வீன் ஃபாத்திமா தற்போது பின்னலாடை நிறுவனம் ஒன்றில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளராக இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்