ஒன்லி எடைக்குறைவுதான்; நோ திருட்டு?! – ராமேஸ்வரம் கோவில் நிர்வாகம் விளக்கம்!

வியாழன், 5 நவம்பர் 2020 (09:34 IST)
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் நகைகள் எடை குறைந்தது குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் உள்ள நகைகள் சமீபத்தில் மறுமதிப்பீடு செய்யப்பட்டபோது எடை குறைந்து இருந்ததாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் திருட்டை எடை குறைவு என சமாளிப்பதாக பலர் பேசியது மேலும் சர்ச்சைக்கு வழிவகுத்தது.

இந்நிலையில் இதுகுறித்து ராமநாத சுவாமி கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் “ராமநாத சுவாமி கோவில் நகைகள் 1978ல் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 40 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பயன்பாட்டில் இருந்த தங்கம், வெள்ளி, முலாம் பூசப்பட்ட இனங்களில் தேய்மானம் காரணமாக எடை குறைந்துள்ளது. இதற்கான தேய்மான தொகை பட்டியல்படுத்தப்பட்டுள்ளதுடன் 1978 முதலாக பணியில் இருந்தவர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு இந்த தொகையினை செலுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை” என விளக்கம் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்