தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சனி, 27 ஜூன் 2020 (14:31 IST)
தமிழகத்தில் கோடைகால  முடிந்து அக்னி நட்சத்திர வெயிலை தாண்டிவிட்ட நிலையில் தென்மேற்கு பருவமழைக் காலம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரந்தில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் சுமார் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பள்ளது.

எனவே, காஞ்சிபுரம், புதுச்சேரி,நாகப்பட்டிணம், காரைக்கால், , விழுப்புரம், கடலூர்,  மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல்,  ஆகிய மாவட்டங்களின் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்