பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரு. 1000 அபராதம் !

வெள்ளி, 26 ஜூன் 2020 (20:04 IST)
தமிழகத்தில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளானர். மக்கள் பாதிப்படைவதைத் தடுக்க அரசு பலவித நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிஉலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் 2ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,000 தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,622ஆக உயர்ந்துள்ளது.

கொரொனா பரவலைத் தடுக்க அரசு எல்லா முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்ட எல்லை மூடப்பட்டுள்ளது.

அங்கு, பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுமென அம்மாவட்ட கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

மேலும், முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.50 அபராதம் எனவும், வணிகநிறுவனங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை எனில் ரூ.50 கடைபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்