பேசாமல் போன பேஸ்புக் காதலன்..! காதலி எடுத்த விபரீத முடிவு! – பொள்ளாச்சியில் சோகம்!

வெள்ளி, 20 நவம்பர் 2020 (15:51 IST)
பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலமாக பழக்கமான காதலன் தன்னை தவிர்ப்பதை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் கேஎல்எஸ் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கணவரை இழந்த இவர் தனது 13 வயது மகனோடு வாழ்ந்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் சின்னாம்பாளையம் பகுதியை சேர்ந்த காதர் மொய்தீன் என்ற நபருக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் பழக்கம் காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புவனேஸ்வரி அடிக்கடி திருமணம் குறித்து காதர் மொய்தீனிடம் பேசியுள்ளார். ஆனால் காதர் மொய்தீன் திருமணம் குறித்த பேச்சை தவிர்த்து வந்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.

இதனால் காதர் மொய்தீன் புவனேஸ்வரியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த புவனெஸ்வரி, காதர் மொய்தீனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்