வேல் யாத்திரைய தடை பண்ணுங்க; மனு கொடுத்தவர்களுக்கு வீட்டு சிறை!

வெள்ளி, 20 நவம்பர் 2020 (12:02 IST)
ஈரோட்டில் வேல் யாத்திரையை தடை செய்ய சொல்லி மனு கொடுக்க வந்தவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக அறிவித்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்த நிலையிலும், தடையை மீறி தமிழக பாஜக பல இடங்களில் வேல் யாத்திரை நடத்தி வருகிறது. திருத்தணி, திருவொற்றியூர், செங்கல்பட்டு என பல இடங்களில் வேல் யாத்திரை நடத்தி கைதான நிலையில், இன்று சென்னிமலையில் வேல் யாத்திரையை தொடங்கியுள்ளது பாஜக.

இந்நிலையில் பாஜக நடத்தும் வேல் யாத்திரை சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும், வேல் யாத்திரை தொடங்கும் முன்னரே அதை தடை செய்ய வேண்டும் என்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் பெரியாரிய உணர்வாளர்கள் அமைப்பினர் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் மனு அளித்த பெரியாரிய அமைப்பினரை காவல்துறையினர் வீட்டு சிறையில் அடைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தவர்கள் மீதே காவல்துறை நடவடிக்கை எடுப்பது சரியா என பெரியாரிய அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்