பிரதமர் மோடியின் அறிவுரைக்கு மு.க. ஸ்டாலின் விமர்சனம் !

செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (14:37 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கி இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் , திமுகதலைவருமான மு.க. ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் செயல்படுத்த உத்தரவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இன்றுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடியும் நிலையில் நாட்டு மக்களோடு உரையாடி வருகிறார்.

அதில் பேசிய அவர் இன்று அம்பேத்கர் பிறந்த நாளை நினவு கூர்ந்தார். பிறகு பேசிய அவர் “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும், இந்திய மக்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இந்திய மக்கள் ஊரடங்கள் பட்ட துயரங்களை என்னால் உணர முடிந்தது. இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதை மேலும் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த 19 நாட்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியம் வாய்ந்தது” என கூறியுள்ளார்.

21 நாட்கள் ஊரடங்கு முடிந்த நிலையில் மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் ஏப்ரல் 20 க்கு பிறகு தளர்வுகள் செய்யப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் , திமுகதலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளதாவது,  பிரதமர் ஆறுதல் தரும் வகையிலான உரையை எப்போது ஆற்றப்போகிறார்; மருத்துவ உபகரணங்கள், நோய் கண்டறியும் கருவிகள் எப்போது தருவீர்கள் ? மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமரிடம் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டுமல்ல; நிவாரணம், பொருள், பண உதவிகளும்தான் என  மு.க.ஸ்டாலின்  விமர்சித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்