தடையில்லாமல் விளைபொருட்களை எடுத்துச் செல்லலாம்! - முதல்வர் அறிவிப்பு

திங்கள், 13 ஏப்ரல் 2020 (16:09 IST)
வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் இன்று செய்தியாளர்களிடம், 1 ½ மாதத்திற்கு தேவையான காற்கறி வாகானங்கள் கையிருப்பு உள்ளது. தமிழகத்தில் 5421 நடமாடும் காய்கறி வாகங்கள் இயங்கி வருவதாகவும், 3341 மெட்ரிக் டன் காய்கறிகள் நடமாடும் வாகனங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், விவசாயப் பொருட்கள் தடையில்லாமல் எடுத்துச் செல்லலாம் என  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  கூறியுள்ளதாவது :

'விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விவசாய விளை பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல எந்தவித பாஸ் மற்றும் அனுமதியும் தேவையில்லை. தடையில்லாமல் விளைபொருட்களை எடுத்துச் செல்லலாம்! 'என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்