பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் இயங்குமா?

செவ்வாய், 24 நவம்பர் 2020 (21:52 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே உள்ள பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழகம் மற்றும் புதுவை மாநில அரசுகள் இணைந்து செய்து வருகின்றன
 
மேலும் இந்த புயலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும் வகையில் தமிழக அரசின் அனைத்து துறைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை புயல் கரையை கடக்க உள்ளதை அடுத்து பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏற்கனவே முன்கூட்டியே பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் நாளை பொது மக்கள் வெளியே வர வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது 
 
இந்த நிலையில் நாளை வழக்கம் போல் பெட்ரோல் பங்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். இதுகுறித்து பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கூறுகையில், ‘கடலூர் ,விழுப்புரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் நிவர் புயல் கரையை கடக்கும் போது பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்