மீண்டும் நகரத்தொடங்கிய நிவர்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

செவ்வாய், 24 நவம்பர் 2020 (20:24 IST)
நிவர் புயல் இன்று மதியம் மூன்று மணி நேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்ததாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இந்த புயல் காரணமாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்றும், நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது என்றும், நிவர் நாளை மாலை கரையை கடக்கும் என்றும் நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையில் இருந்து 430 கி.மீ. தொலைவில் உள்ள நிவர் புயல், அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவும் மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்