கொரோனா இரண்டாவது அலை பரவல்… ரேஷன் கடைகளில் கைரேகை பதிக்க தயக்கம் காட்டும் மக்கள்!

வியாழன், 15 ஏப்ரல் 2021 (07:58 IST)
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க பயோமெட்ரிக் எந்திரங்களில் கைரேகைகளை வைக்கும் முறை இப்போது அமலில் உள்ளது.

தமிழகம்  எங்கும் நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் ஸ்மார்ட் கார்ட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு குடும்ப நபர்களின் கைரேகை வைக்கப்பட்டால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் மக்கள் பலரும் கைரேகைகளை வைக்க தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதனால் கொரோனா அச்சம் குறையும் வரை கைரேகை வைப்பது தேவையில்லை என்று அரசு அறிவிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்