நீட் தேர்வின் கேள்விகள் சிபிஎஸ்சி சிலபஸ்ஸில் இருந்து கேட்கப்படுகிறதா? பிரபல ஊடகம் ஆய்வு

புதன், 16 செப்டம்பர் 2020 (07:44 IST)
நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறும் பெரும்பாலான குற்றச்சாட்டு சிபிஎஸ்சி சிலபஸ்ஸில் இருந்து நீட் தேர்வில் கேள்வி கேட்கப்படுகிறது என்றும், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இருப்பதாகவும் கூறி வருகின்றனர் 
 
ஆனால் உண்மையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பிரபல ஊடகம் ஒன்று ஆய்வு செய்ததில் இந்த ஆய்வின் முடிவில் தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தான் 97 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது/ இதனை அடுத்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து தான் நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்படுகிறது என்ற கூற்று பொய்யாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே நீட் தேர்வு குறித்து மாணவர்களை அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை தவிர்த்துவிட்டு நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் அரசியல்வாதிகள் நடந்துகொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 
 
பதினோராம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களை முழுவதுமாக புரிந்து படித்தால் நீட் தேர்வில் 90 சதவீத கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி விடலாம் என்பதுதான் உண்மை என நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பேட்டிகளில் கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்