சூர்யா அவர்களே சினிமா இல்லை இது.. வானதி சீனிவாசன்!!

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (15:01 IST)
மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம் என வானதி சீனிவாசன் பேச்சு. 

 
முன்னதாக நீட் தேர்வு குறித்த பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகர் சூர்யா நீட் தேர்வை விமர்சித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.  
 
இதற்கு பாஜகவினரும், நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவோரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வானதி சீனிவாசன், சினிமாவில் வசனம் பேசுவதை போல மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம். மாணவர்களின் தற்கொலையை தொடர்ந்து போட்டி தேர்வுகளே கூடாது என்பது போல சூர்யா பேசிகிறார் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்