முகக்கவசம் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது –சத்தீஸ்கர் அரசு

வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:10 IST)
உலகம் முழுவதும் மீண்டும் கொரொனா இரண்டாம் கட்ட அலை பரவி வருகிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மஹாசாஷ்டிர, மத்தியபிரதேசம், பஞ்சாப்,சத்தீஸ்கர்,சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்கள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4563 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தொற்றைக் கடுப்படுத்த அம்மாநில அரசு. மதுபானக் கடைகளில் முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் வழங்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்