முககவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு 100 ரூபாய் அபராதம்

சனி, 13 ஜூன் 2020 (22:46 IST)
கரூரில் முககவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தும் முககவசம் வழங்கி அறிவுறை கூறிய கரூர் போக்குவரத்து ஆய்வாளர்.

கொரோனா நோய் தொற்று காரணமாக முககவசம் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவுரித்தியுள்ளது. இதனிடையே முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு  ரூ 100 அபராதம்மும் சமூக விலகலை கடைபிடிக்காத நிறுவனங்கள் , கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை கரூர் பேருந்து ரவுண்டானா , திண்ணப்பா கார்னர் , லைட்டவுஸ் கார்னர் , சர்ச் கார்னர் , மதுரை , சேலம் , திருச்சி , கோவை மற்றும் ஈரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் கரூர் போக்குவரத்து ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர் . இதில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தும் அமுகக்கவசத்தின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்த காவல் ஆய்வாளர் தண்டம் வித்தித்து அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார்.

மேலும் இதுவரையில் சுமார் 2000 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் செய்தியாளர்களிடம் கூறுகையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி முககவசம் அணியாமல் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் எனவும் முக்கவசம் என்பது மற்றவர்களிடம் இருந்து நேய் தொற்று நமக்கும் நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கு நேய் தொற்று பரவாமல் தடுக்கும் ஓர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் எனவே வாகன பொதுமக்கள் மற்றும் ஓட்டிகள்  கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றார்.


 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்