40 லட்சம் மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் பூமி பூஜை

திங்கள், 1 ஜூன் 2020 (23:49 IST)
கரூர் தாந்தோன்றி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 30 லட்சம் மதிப்பிலான அம்மா பூங்காவை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்  திறந்து வைத்தார்.  மேலும் 40 லட்சம் மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று தொடக்கி வைத்தார்

 
கரூர் மாவட்டம் தான்தோன்றி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டான்கோவில் மேற்கு ஊராட்சி பகுதிகளில் இன்று பல்வேறு திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அம்மா பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. இதில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி, பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி, பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா என சுமார் 70 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பணிகளுக்கான நிகழ்ச்சியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் பூமிபூஜை மற்றும் அம்மா பூங்கா திறப்பு விழா துவங்கி வைத்தார் மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா, அரசு அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்