எதிர்கட்சினா அரசியல் செய்யாம அவியலா செய்யும்? – எடப்பாடியாரை பங்கம் செய்த ஸ்டாலின்!

சனி, 24 அக்டோபர் 2020 (11:19 IST)
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்குதல் தொடர்பாக ஆளுனர் மாளிகை அருகே திமுக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுனர் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டு மாதங்கள் ஆகியும் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.

தற்போது திமுக தலைமையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க கோரி ஆளுனர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “அரசு பள்ளி மாணவர்கள் இடஒதுக்கீடு விவகாரத்தில் மட்டுமல்ல, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தையும் ஆளுனர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்புவதையும், எதிர்ப்பு தெரிவிப்பதையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசியல் செய்வதாக கூறுகிறார். எதிர்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்” என பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்