எனக்கு போஸ்டர் ஒட்டாதீங்க; கேக்காம எதுவும் செய்ய வேணாம்! – நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு!

சனி, 24 அக்டோபர் 2020 (10:55 IST)
நடிகர் விஜய் இன்று தனது நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பேசிய நிலையில் அரசியல் போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம என கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு அதிகமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறது விஜய் அரசியல் பயணம். அவர் அரசியலுக்கு வருவாரா என்பது தெரியாமல் இருந்த நிலையில் சரியான நேரத்தில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளோடு சென்னையில் உள்ள பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அதில் மாவட்ட நற்பணி மன்றங்கள் தன்னை அரசியலில் தொடர்புப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டுவதை அவர் கண்டித்ததாகவும், தன்னை பற்றிய அரசியல் தொடர்புப்படுத்திய போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் நற்பணி மன்றங்களில் உறுப்பினர்களை அதிகப்படுத்தவும், மக்களுக்கு சேவைகள் செய்வதை அதிகப்படுத்துவது குறித்தும் அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்