அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்கும் திமுக!

சனி, 21 நவம்பர் 2020 (13:32 IST)
தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என ஸ்டாலின் அறிவிப்பு. 
 
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் அரசு மருத்துவ கல்லூரியில் 227 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இடங்கள் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டது. ஆனால் தனியார் கல்லூரிகளில் ஏழை மாணவர்களால் எப்படி கல்வி கட்டணம் செலுத்தி பயில முடியும் என கேள்வி எழுந்தது. 
 
இந்த கேள்விக்கு விடை தரும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டதாவது, 
 
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் கட்டணம் கண்டு பரிதவிக்கிறார்கள். அவர்களின் மருத்துவக் கனவு அணையாது. இந்தக் கல்வியாண்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாணவர் நலன் காக்கும் திமுக ஏற்கும் என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்