பாரதத்தின் நிகழ்காலமே! தமிழகத்தின் எதிர்காலமே! - ஓவராய் கூறும் பாஜகவினர்!

சனி, 21 நவம்பர் 2020 (11:34 IST)
தமிழகம் வரும் அமித்ஷாவை வரவேற்று பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 
 
அந்த வகையில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அமித்ஷாவை வரவேற்று, பாரதத்தின் நிகழ்காலமே ! தமிழகத்தின் எதிர்காலமே ! தமிழகம் வரும் தலைமகன் அவர்களே வருக வருக !! என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
இதேபோல தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி ‘எதிரிகள் அவர்தம் படை புகுந்து நைய புடைய எம் தலைவன் வருகிறார். தமிழ்நாட்டின் விதிமாறும் இனி காண்பீர்! எதிர்ப்போர் யாவரும் விலகுவீரே என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்