விஜய்க்கு இந்த அவப்பெயர் தேவையா? வருந்தும் தயாரிப்பாளர்!

வியாழன், 4 ஜூன் 2020 (11:34 IST)
தியேட்டர் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை. 

 
லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும் இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திரையரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பார்வையாளர்கள் வருவார்களா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் திரையரங்கு திறந்தவுடன் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட்டால் மட்டுமே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் பயமில்லாமல் வருவார்கள் என்றும் அதன் பின்னர் திரையரங்குகளில் மற்ற படத்தை திரையிடலாம் என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
எனவே தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் முதலில் திரையிடப்படும் திரைப்படமாக அனேகமாக விஜய்யின் ’மாஸ்டர்’ படமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகள் திறக்கும் முன்னரே சென்சார் சான்றிதழ் வாங்கி திரையரங்குகள் திறந்தவுடன் உடனடியாக இந்த படம் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது. 
ஆனால், திரையரங்கு உரிமையாளர் கேயார் தியேட்டர் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 
 
திரையரங்கு திறந்ததும் முதல் படமாக 'மாஸ்டர்' படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல அது விஜய் ரசிகர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என திரையரங்கு உரிமையாளர் கேயார் முதல்வருக்கு கோரிக்கை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்