குடித்துவிட்டு வீட்டு முன் நிர்வாண தூக்கம்… எழுப்பியவருக்கு ஆபாச அர்ச்சனை – கடைசியில் நடந்த விபரீதம்!

திங்கள், 5 அக்டோபர் 2020 (10:24 IST)
திருப்பூரில் வீட்டு முன் நிர்வாணமாக விழுந்து கிடந்த நபரை பக்கத்து வீட்டுக்காரர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் இவரின் பக்கத்து வீட்டுக்காரரான செல்வம் என்பவருக்கும் நீண்ட காலமாக பகை இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு முழுபோதையில் வந்த சுரேஷ் குமார் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் வீட்டிற்குள் சென்று படுக்காமல் ஆடைகள் அவிழ்ந்த நிலையில் நிர்வாணக்கோலத்தில் வீட்டுக்கு வெளியேயே படுத்துக் கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து கோபமான செல்வம் அவரை எழுப்பி வீட்டினுள் போக சொல்லியுள்ளார். ஆனால் அதைக்கேட்காத சுரேஷ் குமார் அவரை ஆபாசமாக திட்ட ஆரம்பித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் கோபமான செல்வம் அருகில் கிடந்த கல்லை எடுத்து சுரேஷின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் உயிரிழந்துள்ளார். இது சம்மந்தமாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்