இன்று முதல் மீண்டும் 2 ஜி வழக்கு விசாரணை தொடக்கம்… சிபிஐ அழுத்தம்!

திங்கள், 5 அக்டோபர் 2020 (10:02 IST)
ஆ ராசா மற்றும் கனிமொழி மீதான 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் மேல் முறையீட்டை இன்று முதல் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய ஊழல் என ஊடகங்களாலும் எதிர்க்கட்சிகளாலும் பேசப்பட்ட 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி அறிவித்தார்.  இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளன. ஒருவருடமாக இவ்வழக்கு விசாரணையில் இருந்துவருகிறது.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சேத்தி வரும் நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அதனால் அனைத்துத் தரப்பு வாதத்தையும் செப்டம்பர் மாதத்துக்குள் கேட்கவேண்டும் எனகூடுதல் சொலிசிட்டர் சஞ்சய் ஜெயின் தெரிவித்ததை அடுத்து, இன்று மீண்டும் இந்த வழக்கின் விசாரணை தொடங்குகிறது.

சிபிஐ இந்த வழக்கை விரைவாக விசாரிக்க கோரியதை ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம் இன்று முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்