ஊரடங்கு விதிமீறல்… அபராதத்தொகையே இவ்வளவா?

திங்கள், 1 ஜூன் 2020 (14:49 IST)
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்துள்ள நிலையில் அதை மீறியவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை 10 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.   

மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   

இந்நிலையில் இதுவரை விதிகளை மீறியதாக 5.28 லட்சம் வழக்குகளும், 4.38 லட்சம் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதியை மீறியவர்களிடம் இருந்து 9.31 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த தொலை 10 கோடியைத் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்