நிம்மதியை துலைத்தவர் ஸ்டாலின்: கடம்பூரார் விமர்சனம்!

செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (08:55 IST)
நாட்டில் எல்லோரும் நிம்மதியாக வாழ்கின்றனர், மு.க ஸ்டாலின் ஒருவர் தான் நிம்மதியாக இல்லை என கடம்பூர் ராஜூ விமர்சனம். 

 
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் எனும் பெயரில் மாற்றி மாற்றி புகார் பத்திரம் வாசித்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சமீபத்திய பேட்டியில் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, 
 
நாட்டில் எல்லோரும் நிம்மதியாக வாழ்கின்றனர். மு.க ஸ்டாலின் ஒருவர் தான் நிம்மதியாக இல்லை. முக ஸ்டாலினுக்கு தான் ஆட்சிக்கு வர முடியவில்லை, முதல்வராக முடியவில்லை என்று நிம்மதி இல்லாமல் இருக்கிறார். அதனால் தான் மற்றவர்களை பற்றி குறி கூறுகிறார்.
 
நாடகமெல்லாம் நடிக்க, திமுகவிற்குதான் தெரியும். பிரச்சாரம் செய்யும் எல்லா ஊர்களிலும்  ஒரே மாதிரி செட்டிங் போட்டு மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார். மு.க.ஸ்டாலின் இயங்கவில்லை இயக்க படுகிறார். திமுக ஆட்சி போன்று, சட்டம் ஒழுங்கு அதிமுக ஆட்சியில் கெட்டுப் போகவில்லை.  பத்தாண்டு காலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை துளியளவு கூட இல்லை என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்