தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (07:20 IST)
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
குறிப்பாக வடக்கு கேரளாவை ஒட்டிய கடல் வழி மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அதேபோல் வடக்கு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை மேகம் மூட்டத்துடன் வானம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்