விவசாயிகளை எதிரிபோல் நடத்துவதுதான் பாஜக அரசின் மாடலா?- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sinoj

செவ்வாய், 26 மார்ச் 2024 (20:23 IST)
விவசாயிகளை எதிரிபோல் நடத்துவதுதான் பாஜக அரசின் மாடலா?  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய பாஜக அரசை விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி- ராமநாதபுரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல்  பிரசாரம் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசியதாவது:
 
பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்ச தீவு மீட்க்கப்படும் என்ரு கூறினீர்களே அது நடந்ததா? பாஜக ஆட்சிக்கு வந்தால் கறுப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் தருவோம் என்று சொன்னீர்களே. பிரதமர் மோடி ஆட்சியில் வேலையின்மை தலைவிரித்து ஆடுகிறது. விவசாயிகளை எதிரிபோல் நடத்துவதுதான் பாஜக அரசின் மாடலா? திமுக அரசின் கொள்கை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே; பேருக்குத்தான் பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம்; அதில் 60 சதவீதம் நிதி மாநில அரசுதான் தருகிறது என்று கூறினார். 
 
மேலும், திமுக, அதிமுகவிற்குத்தான் போட்டி என பழனிசாமி கூறியுள்ளார். அவருக்கு அந்த அளவிற்காவது புரிதல் இருப்பது மகிழ்ச்சி. என்னைப் பற்றி அவதூறுகள் பரப்பி, விமர்சித்து, என்னை எஃகு போல நெஞ்சுறுதி கொண்டவனாக மாற்றியுள்ளீர்களோ, அதேபோல தற்போது உதய நிதியையும், விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். இது 2வது மகிழ்ச்சியான விஷயம் என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்