பாஜகவுக்கு அதிமுக போட்ட பிச்சை 4 எம்.எல்.ஏ.க்கள்: சி.வி.சண்முகம் பேச்சு

Mahendran

செவ்வாய், 26 மார்ச் 2024 (19:16 IST)
பாஜகவுக்கு தற்போது தமிழக சட்டமன்றத்தில் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்றால் அது அதிமுக போட்ட பிச்சை என அதிமுக எம்பி சிவி சண்முகம் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி விட்டது என்பதும் அதன் பிறகு பாஜகவையும் அதன் தலைவர்களையும் கடுமையாக அதிமுக பிரமுகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

மோடி, அண்ணாமலை உள்பட பாஜக தலைவர்களை அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் விழுப்புரத்தில் இன்று நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்தார். பாஜகவுக்கு இன்று நான்கு எம்எல்ஏக்கள் இருப்பது அதிமுக போட்ட பிச்சை என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றது என்பதும் அதை எடுத்து 4 பாஜக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தான் சிவி சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் மோடியும், அதானியும் அம்பானியும் தான் நன்றாக இருக்கிறார்கள் என்றும் ஏழை எளிய மக்கள் நன்றாக இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு கூஜாதான் என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்