பொது இடத்தில் சிலை வைக்கமாட்டோம்.. ஆனா..! – ட்ரிக்காய் யோசித்த இந்து முன்னணி!

சனி, 22 ஆகஸ்ட் 2020 (08:17 IST)
இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் பொது இடங்களில் சிலை வைக்க தடை விதித்துள்ள நிலையில் இந்து முன்னணி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

’கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைத்து வழிபடுதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்தது. அரசின் தடைக்கு எதிராக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டவை தொடர்ந்து சிலை வைக்க அனுமதி கோரி வந்தன. சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசின் உத்தரவை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அரசின் உத்தரவை மீறாமல் சிலை அமைத்து வழிபட போவதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுகூட்டங்கள், ஊர்வலங்கள், விநாயகர் சிலைகள் கரைப்பு போன்ற நிகழ்ச்சிகள் இருக்காது எனவும், தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றபடும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் விநாயகர் சிலைகள் தனியார் பகுதிகள், வீடுகள் மற்றும் கோவில்களில் அமைக்கப்படும் எனவும், அன்று மாலையே ஊர்வலம் ஏதுமின்றி சிலை கரைக்கப்படும் என்றும் அதற்கு அரசும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்றும் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்