இன்று 19 மாவட்டங்களில் வெப்ப அலை.. மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்..!

Mahendran

சனி, 27 ஏப்ரல் 2024 (11:01 IST)
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தலோடு மஞ்சள் எச்சரிக்கையும்  விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் இருக்கிறது என்பதும் ஒவ்வொரு நாளும் பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

தமிழகத்தின் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும்  அதிகமாக வெப்பம் பதிவாகி வரும் நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்