மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Mahendran

புதன், 27 மார்ச் 2024 (12:17 IST)
மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது

இதில் தங்கள் கோரிக்கையை ஏற்று  மதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் இந்த மனுவை  உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

ஆனால் தேர்தல் ஆணையம் இதற்கு பதில் அளித்த போது அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் மட்டுமே அவர்கள் கேட்கும் சின்னம் வழங்கப்படும் என்றும் 14 ஆண்டுகளுக்கு முன்பே மதிமுக வின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்தது

எனவே பம்பரம் சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறிவிட்ட நிலையில் அந்த கட்சிக்கு என்ன சின்னம் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்