தங்கத்தை விட வெள்ளி பெரியதா ? – மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய தினமலர் !

புதன், 24 ஏப்ரல் 2019 (12:37 IST)
ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்றுள்ள கோமதி மாரிமுத்துவை இருட்டடிப்பு செய்யும் விதமாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

23 ஆவது ஆசிய தடகளப்போட்டிகள் தற்போது கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதாகும் கோமதி இந்த தொடரில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார். கோமதி பந்தய தூரத்தை 2 நிமிடம் 70 வினாடிகளில் கடந்து அவரது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

பொருளாதார சூழ்நிலையில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்துள்ள கோமதிக்கு  பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன். அதையடுத்து பல நாளிதழ்களும் முதல்பக்கத்தில் இதுபற்றிய செய்தியை வெளியிட்டுள்ளன.

ஆனால் தினமலர் நாளிதழ் தங்கம் வென்ற கோமதியின் செய்தியை மிகவும் சிறியதாக போட்டுவிட்டு ஆசியக் கோப்பை போட்டியில் வெள்ளி வென்ற மற்றொரு இந்திய வீராங்கனையான சுவப்னா பற்றிய செய்தியை பெரிதாகப் போட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் தினமலர் வாசகர்கள் தினமலர் நாளிதழின் இந்த இழிவான செயலுக்குக் கணடனம் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்