திருவண்ணாமலையில் சந்தைகளுக்கு தடை: நடமாடும் கடைகளுக்கு அனுமதி

திங்கள், 13 ஏப்ரல் 2020 (11:30 IST)
திருவண்ணாமலையில் காய்கறிகள் வாங்க மக்கள் கூடுவதால் சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், வங்கிகள், ஏடிஎம்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் காய்கறிகள் வாங்க மக்கள் அதிகம் சந்தைகளில் கூடுவதால் சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நடமாடும் காய்கறி கடைகள் அமைத்து வீடுகளுக்கே நேரடியாக விற்பனை செய்ய வியாபாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்