இது மனிதநேயமற்ற செயல்... டிடிவி தினகரன் காட்டம்!

திங்கள், 13 ஏப்ரல் 2020 (10:59 IST)
ஊரடங்கால் பாதிக்கப்படோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்க அரசு தடை விதித்தது மனிதநேயமற்ற செயல் என டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டொர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஏப்ரல் 14 வரை இருக்கும் ஊரடங்கு அதன் பின்னர் நீட்டிக்கப்படுமா என்பதை பிரதமர் அறிவிப்பிற்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.   
 
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல தன்னார்வலர்கள் நிவாரண பொருடகளை வழங்கி உதவ் வந்ததனர். இந்நிலையில், தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் தனியாக பொருட்கள் வழங்க அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு...  
 
சமைத்த உணவுகள், நிவாரணப் பொருட்களை தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் தனியாகவழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது. சில நபர்கள், அரசியல் கட்சிகள், கட்சியினர் நேரடியாக பொருட்களை வழங்குவது தடை உத்தரவை மீறும் செயலாகும். 
 
அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாக கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இதற்கு அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன், ஊரடங்கால் பாதிக்கப்படோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்க அரசு தடை விதித்தது மனிதநேயமற்ற செயல். அரசியல் விளையாட்டை நிறுத்தி மக்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என குறிப்பிட்டு காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்