திருவண்ணாமலை குகையில் சீன வாலிபர்: கொரோனா பயத்தால் பதுங்கல்!

சனி, 18 ஏப்ரல் 2020 (10:59 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருவண்ணாமலை குகை பகுதியில் சீன வாலிபர் பதுங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தோர் உள்ளிட்ட பலரும் சொந்த நாடுகளுக்கு திரும்ப செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதை குகை ஒன்றில் சீன ஆசாமி பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக அங்கு விரைந்து அந்த சீன இளைஞரை மீட்ட போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டதால் ஊரடங்கு முடியும் வரை அவரை மருத்துவமனையிலேயே தங்க வைக்க முடிவு செய்துள்ளனர். எனினும் குகைப்பகுதியில் சீன ஆசாமியின் நடமாட்டம் அந்த பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்