உடற்பயிற்சி சவாலுக்கு தயாரா? – நூதனமாக நிதி திரட்டும் பெண்கள் ஹாக்கி அணி!

சனி, 18 ஏப்ரல் 2020 (10:33 IST)
கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக வித்தியாசமான முறையில் நிதி திரட்டி வருகிறது இந்திய பெண்கள் ஹாக்கி அணி.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி மக்களுக்கு உடற்பயிற்சி குறித்த சேலஞ்ச் ஒன்றை விடுத்துள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் உடலை ஆரோக்யமாக வைத்துக் கொள்ளும் விதமாக 18 நாட்களுக்கு உடல் தகுதி பயிற்சி சேலஞ்ச்கள் ஹாக்கி அணியினரால் வழங்கப்படும். இதில் இணைய குறைந்தபட்சம் ரூ.100 செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் நிதியை பெண்கள் ஹாக்கி அணியினர் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்த போவதாக அறிவித்துள்ளனர்.

இதன்மூலம் வீட்டில் இருப்பவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுடன், ஏழை மக்களும் பயன்பெறுவர் என பெண்கள் ஹாக்கி அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்