டேக்ஸ் போடாத தமிழ்நாடு வேண்டுமா? தொழிலதிபரின் திடீர் கட்சி!

வியாழன், 10 டிசம்பர் 2020 (12:49 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் புதிதாக பல கட்சிகள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் மிகப்பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவில் இருந்த முக்கிய அரசியல் ஆளுமைகள் தற்போது இல்லாததால் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறி மேலும் சில அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் புதிதாக அரசியல் கட்சிகளை தொடங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அனில்குமார் ஓஜா என்ற தொழிலதிபர் சென்னை சாலிகிராமத்தில் ‘மை இந்தியா பார்ட்டி’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதுகுறித்து நாளிதழ்களிலும் விளம்பரப்படுத்தியுள்ள அவர் தனது முதல் தேர்தல் வாக்குறுதியாக “வரிகள் இல்லா தமிழகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனில்குமார் ஓஜா கார்ப்பரேஷன் வங்கியில் ரூ.200 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்