அம்மா சிமெண்ட் விலை அதிகரிப்பு – மக்கள் அதிர்ச்சி!

சனி, 12 டிசம்பர் 2020 (16:51 IST)
மக்களுக்காக குறைந்த விலையில் கொடுக்கப்பட்டு வந்த அம்மா சிமெண்ட் விலை இப்போது 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2015 ஆம் ஆண்டு முதல் அம்மா சிமெண்ட் ரூபாய் 190 க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விலையை 25 ரூபாய் உயர்த்தி 215 ரூ ஆக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் ஏற்கனவே சிமெண்ட் வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு பழைய விலையில் சிமெண்ட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்