கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு: மோசமாகும் இந்திய நிலவரம் ?

சனி, 12 டிசம்பர் 2020 (10:29 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 98,26,775 ஆக அதிகரித்துள்ளது. 442 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,42,628 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,494 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 3,59,819 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 93,24,328 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்