தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா உறுதி!

சனி, 23 மே 2020 (18:22 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மொத்தமாக 15,512 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர்  சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது எனவே சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,989 ஆக அதிகரித்துள்ளது.
.
இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்