2 வது திருமணமப் பேச்சு....கணவரைக் கொன்ற மனைவி !

சனி, 23 ஜனவரி 2021 (18:02 IST)
முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போவதாக தெரிவித்த கணவரை மனைவியே கொலை செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள லாயல்மில்லில் வசித்து வருபவர் பிரபு. இவரது மனைவி உமா மகேஷ்வரி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், அருகேயுள்ள மில்லில் வேலை செய்துவந்த பிரவுக்கும் அவரது மனைவிக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகேஷ்வரி தனது தனது கணவரை கொன்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்து சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் உமா மகேஷ்வரியைக் கைது செய்தனர்.

அவரிடம் இதுகுறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, தனது கணவர் குடிபோதையில் வந்து என்னை அடித்ததுடன் இரண்டாவது திருமணம் செய்வதாகத் தெரிவித்தார். எனவே நான் அவரைக் கொலை செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்