ராமர் கோயிலுக்கு நிதி வழங்கிய சூப்பர் ஸ்டார் !!

சனி, 23 ஜனவரி 2021 (16:42 IST)
கோப்புப்படம்

பல ஆண்டுகளான நீடித்து வந்த அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பு வழகியது. அப்போது அவ்விடத்தில் இந்துகள் ராமர் கோயில் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு உ.பியில் தனி இடம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் சில மாதங்களுகு முன் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகள் தங்கத்திலான செங்கற்கள், கட்டுமான பணிக்கான நிதி என பலவற்றை ராமஜென்ம அறக்கட்டளைக்கு அளித்து வருகின்றனர்.
நேற்று முன் தினம் முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்பீர் ரூ.1 கோடி நிதி வழங்கினார்.


தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் உபி.,ல் ராமர் கோயில் கட்ட அக்கட்சி சார்பில் ரூ.30 லட்சம் நன்கொடை வழங்குவதாக இன்று அறிவித்துள்ளார்.

ஏற்கனவே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய பிரதேஸம் மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், உ.பி., முதவர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் நன்கொடை அளித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்