தமிழகத்தில் 2174 பேர் கொரோனாவால் பாதிப்பு: சென்னையிலும் எகிறியதால் பரபரப்பு

புதன், 17 ஜூன் 2020 (18:23 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 2174 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2000ஐ விட அதிகமாகவும், மொத்தம் 50 ஆயிரத்தை விட அதிகமாகியும் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 2174 பேர்களில் 1276 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,556ஆக  உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 10 நாட்களுக்கு பின் நேற்று சென்னையில் 1000க்கும் குறைவாக கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று மீண்டும் எகிறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 48 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 842 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 27,624 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 25,463 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்பதும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 773,707 பேர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்