விஜய் பட இயக்குனருக்கு கொரோனா! மருத்துவ செலவுகளை ஏற்றது யார் தெரியுமா?

புதன், 17 ஜூன் 2020 (14:19 IST)
விஜய்யின் தமிழன் படத்தை இயக்கிய மஜித் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகியுள்ளார்.

விஜய், பிரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியானது தமிழன் திரைப்படம். இந்த படத்தின் இயக்குனர் மஜித் என்ற புதுமுகம். அந்த படம் வெற்றி பெறாததால் அதன் பின்னர் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற அவர் சிகிச்சைக்கான பணத்தைக் கட்டமுடியாமல் தவித்தார். இதையடுத்து கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ராஜேஷ் அவரது செலவுகளை ஏற்றார். இப்போது மஜித் முழுவதும் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் தயாரிப்பாளர் ராஜேஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்