எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

Prasanth Karthick

செவ்வாய், 7 மே 2024 (19:04 IST)
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் பல இடங்களில் மஞ்சள் அலெர்ட், ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எச்சரிக்கை குறித்தும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.



தமிழ்நாட்டில் கோடைக்காலம் அதன் உச்சத்தை அடைந்து வருகிறது. தற்போது அக்கினி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வருவதால் பல்வெறு நிறங்களிலான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.

வெப்பநிலையானது செல்சியஸ், பாரன்ஹீட் என்ற இரு அளவுக்கோள்களில் அளக்கப்படுகிறது. செல்சியஸ் அளவின் படி 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை என்பது சாதாரண வெப்பநிலையாகும். இதனால் பொதுவாக வெயில் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

40 டிகிரி செல்சியஸ் முதல் 45 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை மஞ்சள் அலெர்ட்டாக அறிவிக்கப்படுகிறது. இந்த வெயில் பொதுவாக மக்களால் தாங்க கூடிய அளவுதான் என்றாலும், குழந்தைகள், முதியவர்கள் வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. அதனால் மஞ்சள் அலெர்ட் பகுதிகளில் குழந்தைகள், முதியவர்கள் வெயிலில் வெளியே செல்வதை தவிர்ப்பதும், முடிந்தளவு வெளியே செல்ல தொப்பி, குடைகளை பயன்படுத்துவதும் நல்லது.

ALSO READ: செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

45 டிகிரி முதல் 47 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையானது ஆரஞ்சு அலெர்ட். இது கடுமையான வெப்பநிலை ஆகும். இந்த வெயில் அளவானது பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ள நீர்ச்சத்தை இழக்க செய்யும். அடிக்கடி தண்ணீர் அருந்துவது அவசியம்.

47 டிகிரி செல்சியஸுக்கு மேல் ரெட் அலெர்ட் எனப்படும் ஆபத்தான வெப்பநிலையாகும். ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட வெப்ப வலிப்பு நோய் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது. அதிகளவில் தண்ணீர் பருகுவதும், முடிந்தளவு நடு மதிய நேரங்களில் வெளியே செல்வதை தவிர்ப்பதும் நல்லது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்