வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நேரம்... மத்திய அரசு திட்டம்??

வியாழன், 11 பிப்ரவரி 2021 (16:41 IST)
தினம்தோறும் எட்டு மணிநேரம் முதல்  பனிரெண்டு மணிநேரம் வேலை என்பது அனைத்துத்துறைகளிலும் வழக்கமான பணிநேரமாக உள்ளது.

இந்நிலையில், வாரத்தில்  4 நாட்கள் மட்டுமே வேலை என்பது போன்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வாரத்தில் மொத்தம் 4 நாட்கள் மட்டுமே வேலை எனவும் மீதமுள்ள 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் புதிய நடைமுறை விரைவில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மத்திய அரசின் இத்திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.  பெரும்பாலான மக்கள் தற்போது உள்ள பழைய நடைமுறையிலே இருப்பது தொழில்துறைக்கு நல்லது எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்