ஒருவழியாக பேசி முடிவுக்கு வந்த சீனா; பின்வாங்கும் படைகள்!

வியாழன், 11 பிப்ரவரி 2021 (10:35 IST)
சீனா – இந்தியா எல்லையில் இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே மோதல் இருந்து வரும் நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் இருநாட்டு படைகளும் பின் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா – சீனா இடையே சில மாதங்கள் முன்னதாக லடாக் எல்லையில் மோதல் நிகழ்ந்த நிலையில் இரு நாட்டு ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டு வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் போர் பதற்றத்தை தணிக்க நடத்தப்பட்ட 8 கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், 9வது கட்ட மேல்மட்ட பேச்சு வார்த்தைகளில் சுமூகமான சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதனால் சீனா நாட்டு பீரங்கிகள் பாங்காங் பகுதியிலிருந்து அந்நாட்டு எல்லைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதேசமயம் இந்தியா தரப்பிலும் வழக்கமான பாதுகாப்பு படையினரை தவிர கூடுதல் வீரர்களை திரும்ப பெறுவதாக தகவல்கல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்